தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

50பார்த்தது
தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சி, 57; இவரது மகன் திருப்பதி, 27; இவர், குடித்துவிட்டு அடிக்கடி தந்தை கொளஞ்சியிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் தகராறு செய்த திருப்பதி, வீட்டின் கதவை உடைத்து கொளஞ்சியை கட்டையால் தாக்கினார். இதில் கொளஞ்சி தலையில் படுகாயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து திருப்பதியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி