சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, தனசேகர் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஷாஜகான் மகன் முகமது அப்தாலி, 18; ஷாப்ஜான் மகன் ஜபருல்லாதீன், 23; ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.