போக்குவரத்து கழகத்தில் தமிழ்நாடு அரசு காண்ட்ராக்ட் முறையை புகுத்தி சமூக நீதியை அழிப்பதை கண்டித்தும், தனியார் மயப்படுத்த முயற்சிப்பதை நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நேற்று மாலை மக்கள் சந்திப்பு இயக்கம் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்ணன் கலந்து கொண்டார்.