அதிமுக வேட்பாளருக்கு எம்எல்ஏ ஓட்டு சேகரிப்பு

55பார்த்தது
அதிமுக வேட்பாளருக்கு எம்எல்ஏ ஓட்டு சேகரிப்பு
க. மாமனந்தல் பள்ளிவாசலில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அ. தி. மு. க. , வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக செந்தில்குமார் எம். எல். ஏ. , ஓட்டுசேகரித்தார்.

கள்ளக்குறிச்சி க. மாமனந்தல் பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த முஸ்லிம்களிடம் எம். எல். ஏ. , செந்தில்குமார் அ. தி. மு. க. , வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். க. மாமனந்தல் ஜாமியா வக்ப் பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த முஸ்லிம்களிடம் அ. தி. மு. க. , வேட்பாளர் குமரகுருவுக்கு ஓட்டு அளிக்கும்படியான பிரசார நோட்டீஸ்களை வழங்கி எம். எல். ஏ. , செந்தில்குமார் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தலில் வேட்பாளர் குமரகுருவை வெற்றிபெற செய்தால், ஆற்று மாமனந்தல் ஆற்றின்மீது மேம்பாலம் உள்ளிட்ட தங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்து தரப்படும் என வேட்பாளர் தரப்பில் எம். எல். ஏ. , செந்தில்குமார் உறுதியளித்தார். இதில் அ. தி. மு. க. , கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், தே. மு. தி. க. , ஒன்றிய செயலாளர் நல்லதம்பி உள்ளிட்ட அ. தி. மு. க. , மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி