காளதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

56பார்த்தது
காளதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
சின்னசேலம் அடுத்த பெத்தாசமுத்திரத்தில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத காளதீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் ஊர்பொதுமக்கள் சார்பில் புணரமைக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷகம் தொடங்கியது. தொடர்ந்து, லட்சுமி ேஹாமம், நவகிரஹ ேஹாமம், புண்ணியாகவஜனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், நேற்று முன்தினம் யந்திர ஸ்தாபனம், சுவமி பிரதிஷ்டை, பூர்ணாஹூதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று காலை கோ பூஜை, அதர்வன வேதபாராயணம், நாடி சந்தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து கும்பாபிேஷகம் நடந்தது. பெத்தாசமுத்திரம் செல்வகுமார், செல்வகணேஷ், ஆவட்டி தெய்வசிகாமணி ஆகியோர் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைத்தனர். தொடர்ந்து, சுவாமிகளுக்கு மகா தீபாரதணை காண்பிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி