கள்ளக்குறிச்சி: மளிகை பொருட்கள் விற்பனை துவக்கம்

58பார்த்தது
கள்ளக்குறிச்சி: மளிகை பொருட்கள் விற்பனை துவக்கம்
கள்ளக்குறிச்சியில் தீபாவளி பண்டிகையையொட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சிறப்பு மளிகை பொருட்கள் விற்பனை துவங்கியது.

நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கி விற்பனையை துவக்கி வைத்தார். பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சுரேஷ், கள்ளக்குறிச்சி சரக துணைப்பதிவாளர் சுகுந்தலதா முன்னிலை வகித்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் முறுக்கு தயாரிக்க தேவைப்படும் 5 மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 14 பொருட்கள் கொண்ட தொகுப்பு (எடை குறைவு) 199 ரூபாய்க்கும், (எடை அதிகம்) 299 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க செயலாட்சியர் செந்தில், பொது வினியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் சக்திவேல், கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் நிர்மல் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி