கள்ளக்குறிச்சி: விலையில்லா சைக்கிள் வழங்கல்

82பார்த்தது
கள்ளக்குறிச்சி: விலையில்லா சைக்கிள் வழங்கல்
உலகங்காத்தான் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சுசீலா குழந்தைவேல் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை லூர்துமேரி வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் பெருநற்கிள்ளி ஆகியோர் 62 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினர். நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் மலர்கொடி கொளஞ்சி, ஊராட்சி தலைவர்கள் சசிகலா தனவேல், முருகேசன், தி.மு.க. அவைத்தலைவர் தங்கவேல், மாவட்ட பிரதிநிதி பெருமாள், இளைஞரணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி