கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

52பார்த்தது
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
உலக சுற்று சூழல் தினத்தையொட்டி, கச்சிராயபாளையம் பகுதியில் இயங்கும் கள்ளக்குறிச்சி கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைப்பதிவாளர் யோகவிஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுசூழல் அலுவலர் பூபதி ராஜா, உதவி பொறியாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ள மக்காத பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்த கூடாது. கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் போது மஞ்சப்பை எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, ஆலை வளாகத்தில் வேப்பமரம், புங்கமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி