கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் முன்னிட்டு தனது நாக்கில் டூத் பேஸ்ட்டை வைத்து "நாக்காலேயே" அப்துல் கலாம் படத்தை வரைந்தார்.
ஓவிய ஆசிரியர் செல்வம் கூறுகையில்: - கலாம் கலாம் என எப்போதும் எனது நாக்கு உச்சரித்தே கொண்டிருக்கும். அந்த வகையில் இதை குறிக்கும் விதமாக. தனது நாக்கில் டூத் பேஸ்ட்டை வைத்து "நாக்காலேயே" அப்துல் கலாம் படத்தை ஐந்து நிமிடத்தில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.
இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள், மாணவர்கள் ஓவிய ஆசிரியர் செல்வத்தை பாராட்டினார்கள்.