காட்டுஎடையாரில் பிரிட்ஜ் வெடித்து சிதறிய விபத்தில், நகை, பணம் மற்றும் சான்றிதழ்கள் தீயில் கருகின.
ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் அண்ணாதுரை, 45; இவரது வீட்டிலிருந்த பிரிட்ஜ் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதில் வீட்டின் மேற்புற ஷீட் கூரை உடைந்து சேதமடைந்ததுடன், தீ பரவியது.
இது குறித்து தகவலறிந்த ரிஷிவந்தியம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில், பீரோவில் இருந்த 5 சவரன் நகை, ரூ. 25 ஆயிரம் பணம், சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் விசாரிக்கின்றனர்.