கள்ளக்குறிச்சி: இலவச வேட்டி சேலைகள்...!

1071பார்த்தது
கள்ளக்குறிச்சி: இலவச வேட்டி சேலைகள்...!
கள்ளக்குறிச்சியில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பண்டிகை இலவச வேட்டி சேலைகள், கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுதும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி தாலுகாவுக்குட்பட்ட ரேஷன் கடைகளில் வழங்கிடும் வகையில், முதற்கட்டமாக 7ஆயிரம் வேட்டிகள், 7 ஆயிரம் புடவைகள் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகளை கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்திலிருந்து தாசில்தார் பிரபாகரன் நேற்று துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வரவுள்ள வேட்டி சேலைகள் பொங்கல் விழாவிற்கு முன்பாக பயனாளிகளுக்கு வழங்கிடும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி