தியாகதுருகம் வேளாண் அலுவலகத்தில் மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குனர் (பொ) வனிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தியாகதுருகம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்கு இடுபொருள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
தியாகதுருகம் பகுதியில் சம்பா பருவத்திற்கு தேவையான உயர் விளைச்சல் தரும் நெல் விதை ஆடுதுறை, 54, உளுந்து வம்பன்- 8, வம்பன் - 11 ரக விதைகள், உயர் ரக மக்காச்சோள விதை, வேர்க்கடலை விதை, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுாட்ட உரங்கள் ஆகியன மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. விவசாயிகள் இடுபொருட்களை பெற பணமாக செலுத்தி வாங்கி செல்கின்றனர்.
இதனை எளிமைப்படுத்தும் வகையில் இடுபொருட்களுக்கான தொகையை ஏ. டி. எம். , கார்டு, கூகுள் பே அல்லது போன் பே மூலம் செலுத்தி பயனடையலாம். இதற்காக வேளாண் விரிவாக்க மையத்தில் மின்னணு பரிவர்த்தனை செய்ய பி.ஓ.எஸ். , கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த எளிய முறை சேவையை விவசாயிகள் பயன்படுத்தி இடுபொருட்களை வாங்கி மகசூலை பெருக்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.