கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சியில், ரிஷிவந்தியம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அகியோர் இன்று (ஜூலை 29) சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா இணை சீருடைகளை வழங்கினர். உடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.