சங்கராபுரம்: பற்றி எரிந்த கரும்புத் தோட்டம்

2246பார்த்தது
சங்கராபுரம்: பற்றி எரிந்த கரும்புத் தோட்டம்
பரமநத்தம் ரோடு அருகே பழைய சிறுவங்கூர் கிராமத்தைச் சார்ந்த ஜெய்சங்கர் என்பவர் கரும்புத்தோட்டம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பரமநத்தம் ரோடு அருகே பழைய சிறுவங்கூர் கிராமத்தைச் சார்ந்த ஜெய்சங்கர் என்பவர் கரும்புத்தோட்டம் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக சங்கராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கரும்புத் தோட்டத்தில் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைத்தனர்.

இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக கரும்புகள் ஏதும் பாழாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி