சின்னசேலம்: பூட்டிய வீட்டில் நகை திருட்டு

58பார்த்தது
சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 41; இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டி சாவியை அருகில் உள்ள ஜன்னலில் மறைத்து வைத்துவிட்டு மனைவியுடன் வயலுக்குச் சென்றார். அடுத்த சில மணி நேரங்களில், அவரது வீடு திறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த, ஒன்றரை சவரன் நகை; 3 ஜோடி வெள்ளி கொலுசுகள் திருடு போயிருந்தது. இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி