கள்ளக்குறிச்சி: வக்ப் சட்ட திருத்த மசோதா ஆர்ப்பாட்டம்

342பார்த்தது
கள்ளக்குறிச்சி: வக்ப் சட்ட திருத்த மசோதா ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி, மேற்கு மாவட்ட த. வெ. க. , சார்பில், வக்ப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ராமு, பொருளாளர் ஜவகர், துணை செயலாளர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் மத்திய பா. ஜ. , அரசு கொண்டுவந்துள்ள வக்ப் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நிர்வாகிகள் சுதாகர், ரவி, வரதன், திலீப்குமார், ஸ்டாலின், சின்னதுரை, அருண்குமார், கார்த்திக், சந்துரு, விக்ரம், ஜெயபிரகாஷ், கோவிந்தராஜ், கிஷார்கான், அரிகோவிந்த், செல்வம், சுரேஷ், வெங்கடேஷ், பர்ஜனாபேகம், பஞ்சம்மாள், அறிவுமணி, தினேஷ், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி