தியாகதுருகத்தில்: சமுதாய வளைகாப்பு விழா

68பார்த்தது
தியாகதுருகத்தில்: சமுதாய வளைகாப்பு விழா
தியாகதுருகத்தில் சமுதாய வளைகாப்பு விழாவில், 150 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. தியாகதுருகத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இதில் ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். 

மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய துணை சேர்மன் நெடுஞ்செழியன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, துணைத்தலைவர் முருகன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர், பி.டி.ஓ.க்கள் கொளஞ்சி வேலு, செந்தில் முருகன், மருத்துவ அலுவலர் செந்தமிழ்செல்வி முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கல்பனா வரவேற்றார். அலுவலர் பிரியதர்ஷினி கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறித்து விளக்கினார். 

நிகழ்ச்சியில், 150 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை தட்டுகள் வழங்கி, வளையல் அணிவித்து வளைகாப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, 5 வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டன. இதில் மேற்பார்வையாளர் எழிலரசி, இளநிலை உதவியாளர் அருண்பிரசாத், அலுவலக உதவியாளர் வெங்கடேஷ், மேற்பார்வையாளர்கள் தேவகி, ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி