வைகையாற்றில் கள்ளழகர் - தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை

46518பார்த்தது
வைகையாற்றில் கள்ளழகர் - தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை
மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பாரம்பரிய முறையில், தோல் பை வைத்து மட்டுமே தண்ணீரை பீய்ச்ச வேண்டும் என்றும் அவ்வாறு தண்ணீர் பீய்ச்சுபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. கள்ளழகர், அழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரும் வரை இடையே எந்த இடத்திலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது.

இதனை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், ஆணையரும் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமினாதன் உத்தரவிட்டுள்ளார். அதே போல், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல்துறையினர் அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி