118 வயது மிட்டாய் தாத்தா தேர்தல் பிரச்சாரம்

51பார்த்தது
118 வயது மிட்டாய் தாத்தா தேர்தல் பிரச்சாரம்
தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் முகமது அபுசாலி (118) 'மிட்டாய் தாத்தா' என்று அழைக்கப்படும் இவர், வீட்டையொட்டி மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடங்கி வைத்த மிட்டாய் தாத்தா, 'மதிப்புமிக்க வாக்குகளை பணத்துக்காக விற்காமல் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்து முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களின் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தில் நமது உரிமையை நிலைநாட்டும்' என்று கூறி இனிப்புகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி