தி.மு.க ஆட்சி அமைத்தது முதல் தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி.செழியன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக கோவி.செழியன் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார். இதனையடுத்து தலைமை கொறடாவாக கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வந்த ராமச்சந்திரன், தற்போது அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.