ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விசாரணையில், “பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் என உள்ளது. இது போன்ற உத்தரவுகளில் கையெழுத்திடும்போது அரசுத் துறை செயலாளர் யோசிக்க வேண்டாமா?. மாதம் ரூ.6ஆயிரம் என்றால் ஒரு நாளைக்கு ரூ.200 வைத்து எப்படி வாழ முடியும். இதுகுறித்து அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.