தர்மபுரியில் ஜல்லிக்கட்டு 600 காளைகள் பங்கேற்பு

80பார்த்தது
தர்மபுரியில் ஜல்லிக்கட்டு 600 காளைகள் பங்கேற்பு
தர்மபுரி: சோகத்தூர் ரெட்டிஅள்ளி சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, வீரத் தமிழன் பேரவை சார்பில் 4ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று காலை துவங்கியது. இதனை அமைப்பு செயலாளர் கே.பி.அன்பழகன், தர்மபுரி ஆர்டிஓ பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். முதலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தருமபுரி, சேலம், புதுக்கோட்டை, மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த ஜல்லிகட்டில் சுமார் 600 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.