குட்காவைப் பரப்பியதே அதிமுக தான் - ஆர்.எஸ்.பாரதி

59பார்த்தது
குட்காவைப் பரப்பியதே அதிமுக தான் - ஆர்.எஸ்.பாரதி
தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படுகிறது,இதுகுறித்து பேசியுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக குட்காவை பரப்பியது அதிமுக தான்; அதிமுகவின் குட்கா விவகாரத்தை திசை திருப்பவே அக்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. போதைப் பொருள் புகாருக்கு உள்ளானதும் திமுகவில் இருந்து சம்மந்தப்பட்டவர் நீக்கப்பட்டார்; பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி