ஜெயிலர் 2 அப்டேட் கொடுத்த நடிகை

68பார்த்தது
ஜெயிலர் 2 அப்டேட் கொடுத்த நடிகை
ஜெயிலர் திரைப்படம் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் ஹிட் ஆனதால் செம்ம குஷியில் இருந்த ரஜினிகாந்த், நெல்சனை அழைத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலையை ஆரம்பிக்க சொல்லி இருந்தார். அதற்கான வேளையில் நெல்சன் தற்போது இறங்கியுள்ளார். இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்த மிர்ணா சமீபத்திய பேட்டியில் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார். அதன்படி நெல்சனிடம் பேசுகையில், அவர் ஜெயிலர் 2 ஸ்கிரிப்ட் தயார் செய்யும் வேலைகள் நடைபெற்று வருவதாக தன்னிடம் கூறினார். அதில் தான் இருக்கிறேனா இல்லையா என்பதை அவர்தான் கூற வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி