கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பொய்கை அணை அருகே கன்னிவெடி வெடித்ததில் பசு மாட்டின் வாய் சிதறி காயமடைந்துள்ளது. அந்தப் பகுதியில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக சிலர் கன்னிவெடிகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் உள்ள வெடி வெடித்து பசு மாட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் அவர்கள் நேற்று (நவ., 05) விசாரணை நடத்தினர்.