கோவையில் உள்ள ரேஷன் கடைகளில் போலி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருப்பதாக பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இது தவறான செய்தி என தெரிவித்துள்ள் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம், கோவையில் உள்ள மத்துவராயபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். அதனால் கணவர் குடும்ப அட்டையின் நகலை வைத்து பொருட்களை வாங்கி வந்தார். அது போலியான அட்டை இல்லை என தெரிவித்துள்ளது.