சமீபத்திய சோகம் காஸாவில் நிகழ்ந்தது. தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 36 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். காசா முழுவதுமாக அழிக்கப்பட்டாலும், இஸ்ரேலிய ராணுவம் இன்னும் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை. காசா சுகாதார திணைக்கள அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்த விவரங்களை ஊடகங்களுக்கு தெரிவித்தனர். கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்ததாக நாசர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.