ISPL கிரிக்கெட்.. அப்டேட் கொடுத்த சூர்யா

62பார்த்தது
ISPL எனப்படும் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் பத்து ஓவர் கிரிக்கெட் போட்டி விரைவில் இந்தியாவில் நடைபெற உள்ளது. மார்ச் மாதம் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் மொத்தம் 6 அணிகள் விளையாட உள்ளன. இதில் ஸ்ரீநகர் அணியை அக்சய்குமார், மும்பை அணி அமிதாப் பச்சன், பெங்களூரு அணி ஹிருத்திக் ரோஷன், ஹைதராபாத் அணி ராம் சரண், கொல்கத்தா அணி சைப் அலி கான், கத்ரினா கைப், சென்னை அணி சூர்யா ஆகியோர் வாங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா வாங்கியுள்ள சென்னை அணிக்கு சென்னை சிங்கம்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி