பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி இன்று (ஜூன் 05) ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார் மோடி. அப்போது அவர் குடியரசு தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். மோடியுடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். 17-வது மக்களவையை கலைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி இந்த சந்திப்பை நடத்தியுள்ளார்.