உத்தவ் தாக்ரேவின் சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து அஜித் பவார் தலைமையில் ஒரு அணியையும் கட்டமைத்து, அந்த அரசில் துணை முதலமைச்சராக இருந்து வருகிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ். இந்த நிலையில் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக மோசமாக தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாகவும் பாஜக தலைமை தனது கோரிக்கையை ஏற்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.