பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அங்கு, அவர் பேச வாய்ப்பு கொடுக்காததால் அவர் பாதியில் வெளிநடப்பு செய்தார். இதனை கண்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?. எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் கூட்டுறவு கூட்டாட்சியா?” என குறிப்பிட்டுள்ளார்.