திருமாவளவன் அதிமுக கூட்டணியை நோக்கி நகர்வதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் மது ஒழிப்பு என்பது சாத்தியமில்லாதது. ஆனால் மது ஒழிப்பு என்பதை கையில் எடுத்துக் கொண்டு, அந்த மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது திமுக கூட்டணியை விட்டு வெளியேறத்தான் என்றும், அதிமுகவிற்கு சென்றால் சீட்டுகள் அதிகம் கிடைக்கும் என்பதால் திருமாவளவன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.