"சனாதனத்தை அவமதித்தவர் துணை முதல்வரா.?" பாஜக கேள்வி

75பார்த்தது
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதற்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “துணை முதல்வர் ஆவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. ஏன் அமைச்சராக இருப்பதற்கு கூட அவருக்கு பக்குவம் கிடையாது. சனாதன தர்மத்தை இழிவாக பேசிவிட்டு, அதற்கு மன்னிப்பு கூட கேட்காதவர் எப்படி துணை முதல்வர் ஆகலாம்.? என கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்புடைய செய்தி