ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள், அக்கட்சி இப்போது இந்துத்துவாவின் வியூகத்தை மாநிலத்தில் பின்பற்றுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஹிமாச்சல பிரதேச அமைச்சர் விக்ரமாதித்ய சிங் உட்பட பல காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளால் சர்ச்சை எழுந்துள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கட்சி இந்துத்துவா கோட்பாடுகளை நோக்கி மெல்ல நகர்வதாக குற்றச்சாட்டு உள்ளது.