அயர்லாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயம்!

68பார்த்தது
அயர்லாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயம்!
இன்றைய டி 20 ஆட்டத்திற்கான டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து கனடா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஜான்சன் மற்றும் நவ்நீத் தலிவால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் நவ்நீத் தலிவால் 6 ரன், ஆரோன் ஜான்சன் 14 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதில் நிக்கோலஸ் கிர்டன் 49 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய தில்லன் ஹெய்லிகர் 0 ரன்னில் அவுட் ஆனார். கனடா அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி ஆட உள்ளது.

தொடர்புடைய செய்தி