ஒய்எஸ்ஆர் காங். கவுன்சிலருக்கு நடுரோட்டில் கத்திக்குத்து

55பார்த்தது
ஒய்எஸ்ஆர் காங். கவுன்சிலருக்கு நடுரோட்டில் கத்திக்குத்து
ஏலூர் மாவட்டம் நுஜி வீடு பகுதியில் நேற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பழைய பகைக்கு பின்னணியில் இருகட்சியினரும் நடுரோட்டில் கத்தியால் சரமாரி தாக்கி கொண்டனர். இதைபார்த்த பொதுமக்கள் மிகுந்த பதற்றமடைந்து ஓடினர். இந்த தாக்குதலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கவுன்சிலர் நந்திகுரு கிரீஷ், அவரது ஆதரவாளர் நுகலா சாய்கிரண் ஆகியோர் காயமடைந்தனர். கவுன்சிலர் நந்திகுரு கிரீஷை மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவுக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.