முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் பிரசாந்த்

69பார்த்தது
முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் பிரசாந்த்
நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகியோர் சந்தித்து பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் பிரசாந்த் நடிகர் விஜய் உடன் இணைந்து "கோட்" படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில், "அந்தகன்" படம் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி