ராகுல் காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தல்!

79பார்த்தது
ராகுல் காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தல்!
தலைவர் ராகுல்காந்தி மக்களவையின் அங்கீகரிக்கப்பட்ட எதிர் கட்சி தலைவர் என்ற பொறுப்பினை மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.பாராளுமன்ற மரபில் எதிர்கட்சி தலைவர் பதவியினை "நிழல் பிரதமர்" என்றே அழைப்பர். அடுத்த ஆண்டில் வரப்போகும் மூன்று சட்ட மன்ற தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை. இந்தியா கூட்டணியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி அம்மாநில தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான பணிகளை உடனடியாக துவங்க வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தேசம் முழுவதும், கொள்கை வழிப்பட்ட, அர்ப்பணிப்புடன் கடினமாக உழைக்கக் கூடிய பல அருமையான இளைய தலைமுறை தலைவர்களை அடையாளம் காட்டியுள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சுப்ரியா சூலே, அபிஷேக் பானர்ஜி,‌ கனிமொழி கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் போன்ற இளைய தலைமுறை தலைவர்கள் வேறுபட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வருணாசிரம தர்ம, மதவாத வலதுசாரி அரசியலை முழுமையாக எதிர்ப்பதில் உறுதியாக நின்றார்கள். இவர்களோடு ராகுல்காந்தி உரையாடல்களை தொடரவேண்டும். சமூக நீதிக்கான அரசியல் தளத்தை தேசம் முழுவதும் விரிக்க வேண்டும். மதவாத அரசியல் நாகம் தலையில் அடிபட்டு கவிழ்ந்து கிடந்தாலும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்பதுதான் உண்மை. அதனை முழுமையாக இந்திய மண்ணில் இருந்து அகற்ற ராகுல் காந்தி நாடு முழுவதும் வலம் வரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி