அயர்லாந்து ஆல் அவுட்.. மாஸ் காட்டிய இந்திய வீரர்கள்

59பார்த்தது
அயர்லாந்து ஆல் அவுட்.. மாஸ் காட்டிய இந்திய வீரர்கள்
டி20 உலகக்கோப்பை 2024ல் இந்தியா ஆடும் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்நிலையில், அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப், பும்ரா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், அக்சர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி