முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் - அண்ணாமலை

64பார்த்தது
முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் - அண்ணாமலை
தேவநாதன் கைது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், பாஜக கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாக கண்டிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி