ரேஷன் கடை பணிக்கு நேர்முகத் தேர்வு

9121பார்த்தது
ரேஷன் கடை பணிக்கு நேர்முகத் தேர்வு
திருச்சி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களில் 201 விற்பனையாளர் மற்றும் 30 கட்டுனர் பணியிடங்கள் உள்ளன. இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக் கான நேர்முகத்தேர்வு 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடைபெற உள்ளது. எனவே, நேர்முகத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டு 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் திருச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் https://www.drbtry.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையக்குழுவை, 0431- 2424170 என்ற எண்ணிலும், drbdstrichy2021@gmail.com என்ற இமெயிலிலும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, திருச்சி மண்டல இணைப் பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி