கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரிய அரசு

72பார்த்தது
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரிய அரசு
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இதையடுத்து, ஒண்டிப்புதூரில் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில், டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி