அண்ணாமலையால் தான் அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது என்றும், பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் 35 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி இருக்கும் என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியிருந்தார். இது குறித்து பேசி உள்ள அண்ணாமலை அதிமுக பாஜக ஒன்றாக இருந்திருந்தால் 35 இடங்களை பிடித்து இருக்கும் என எஸ்.பி வேலுமணி இப்போது வந்து கூறுகிறார். தனியாக இருந்தே அதிமுக ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. வேலுமணிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உட்கட்சி பிரச்சனை இருப்பது போல தெரிகிறது” என கூறியுள்ளார்.