பங்களாதேஷின் மெஹெர்பூரில் உள்ள குரங்கு ஒன்று, தனக்குக் காயம் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள பார்மெசிக்கு சென்றுள்ளது. அங்கு அது தனக்குக் காயமடைந்த இடத்தை காட்டியுள்ளது. மேலும் ஒரு நபர் அந்த குரங்கின் அடிபட்ட பகுதிக்கு மருந்தை இடுகிறார். உடனே அந்த குரங்கு வலி அதிகமானதை போல வேகமாக எழுந்து அந்த காயத்தைப் பார்க்கிறது. இந்த வீடியோ ஒட்டுமொத்த மக்களிடையேயும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.