பலம் வாய்ந்த அணியுடன் மோதும் இந்திய அணி

55பார்த்தது
பலம் வாய்ந்த அணியுடன் மோதும் இந்திய அணி
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் மொத்தம் 36 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 9 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கிறது. 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள கத்தார் 3-வது சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறி விட்ட நிலையில் அந்த அணியுடன் இந்தியா இன்று (ஜூன் 11) மோதுகிறது. போட்டியானது கத்தாரின் ஜாசிம் பின் ஹமாத் ஸ்டேடியத்தில் நடக்கிறது. பலம் வாய்ந்த கத்தாரை அவர்களது இடத்தில் வீழ்த்துவது இந்தியாவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

தொடர்புடைய செய்தி