இந்தியாவை சேர்ந்த சிராக் அன்டில் (21) என்ற மாணவர் கனடாவின் தெற்கு வான்கூவரில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இந்நிலையில் மர்ம நபர்கள் அவரை காருக்குள் வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். காருக்குள் இருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது சிராக் சடலமாக கிடந்தார். சம்பவம் தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்த போலீசார் விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தனர்.