இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 10 தங்கப் பதங்கங்களை இந்தியா வென்றுள்ளது. 1928,1932,1936,1948,1952, 1956,1964,1980 என 8 முறை ஹாக்கி அணி தங்கம் வென்றுள்ளது. 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற துப்பாக்கி சூடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து 2020-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம் கூட வெல்லவில்லை.