பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் 2024 ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் பன்வர் பல்ராஜ் காலிறுதிக்கு முன்னேறினார். ரெப்பசேஜ் என்னும் மறுவாய்ப்பு சுற்றில் இந்திய வீரர் பன்வர் பல்ராஜ் 07.12 நிமிடங்களில் இலக்கை எட்டி 2வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார். ஜூலை 30ஆம் தேதி மதியம் 1.40 மணி அளவில் கால் இறுதி போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.