இந்திய கிரிக்கெட் அணிக்கு சில காலமாக பந்துவீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்படாமல் இருந்தது. அண்மையில் முடிந்த இலங்கைக்கு எதிரான தொடருக்காக இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பஹுதுலே செயல்பட்டார். இந்த நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான மோர்னே மோர்கல் நியமிக்கபட்டுள்ளார். அவரது ஒப்பந்த காலம் செப்டம்பர் 1 முதல் தொடங்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.