வட இந்தியாவில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை குறித்து புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது. இது கிருஷ்ணருக்காக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். கிருஷ்ணர் தனது தோழி ராதா மீது வண்ணப் பொடிகளை தூவி விளையாடினர். அவரது வழியை கடைப்பிடித்து கோபியர்களும் வண்ணப் பொடிகளை தூவி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். காலப்போக்கில் இது திருவிழாவாக மாறியது. ஹோலி தினத்தன்று கிருஷ்ணரை வழிபடும் வழக்கம் வட இந்தியாவில் உள்ளது.